திருச்சி: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி முறை நிலவ வேண்டும் என மதிமுக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மதிமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் வெளியிட்டார்.
“புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யவும், சுங்கச்சாவடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
“மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும்,” என்றும் மதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

