அதிமுக வெற்றிபெற அக்னிச்சட்டி ஏந்திய நடிகர்; நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர்

அதிமுக வெற்றிபெற அக்னிச்சட்டி ஏந்திய நடிகர்; நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர்

1 mins read
14f74fd4-af47-4060-a17d-fb3c0368403a
அக்னிச்சட்டி ஏந்தி நடிகர் கஞ்சா கருப்பு. - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றிபெற வேண்டி திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கஞ்சா கருப்பு கூறுகையில், “எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம்.

“இந்தத் தேர்தலில் அதிமுகவினர் எல்லாத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி குடும்பத்துடன் அக்னிச்சட்டி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களைச் செலுத்தியுள்ளோம்.

“அதிமுகவுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளேன்.

“அதிமுகவினர் என்றைக்கும் ஒற்றைப் பரம்பரைதான். தனித்து நின்று ஜெயித்துதான் பழக்கம். கூட்டணி அமைத்து நின்று பழக்கம் இல்லை. என்றைக்கும் எடப்பாடி எடப்பாடிதான்.

“தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும். ஜெயிப்பவர்கள் ஜெயித்துக்கொண்டே இருப்பார்கள் எடப்பாடியைப்போல,” என்றார்.

இதற்கிடையே, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த உயர்கல்வித் துறை அமைச்சரான பொன்முடி, திடீரெனப் பிரசாரப் பாடலை ஒலிக்கச் செய்து அதற்கு நடனமாடியபடி வாக்கு கேட்டார்.

இதைக்கண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்களும் திமுகவினரும் சிரித்து கைதட்டி வரவேற்றனர்.

குறிப்புச் சொற்கள்