தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்திரப்பதிவுக்கு கூடுதல் பொறியாளர்கள் சேர்ப்பு

1 mins read
0c76fdc6-9b45-4e97-91d8-37d1022a8346
வீடு, மனை பத்திரப் பதிவுகளை விரைவாக்க கூடுதல் பொறியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். - கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்வது அதிகரித்துள்ளது.

இதையடுத்து தேவையைச் சமாளிக்கும் விதமாக புதிதாக 1,231 பொறியாளர்களுக்கு நிலங்களுக்கான பட்டா உட்பிரிவு பணிகளை மேற்கொள்ள நில அளவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

நில அளவையர் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, நில அளவை பணியில் உரிமம் அடிப்படையில், வெளியாட்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு, நில அளவை பணி குறித்த பயிற்சி அளித்து, உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள், தாலுகா அளவில் பணி புரிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இனி பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிப்போர், குறிப்பாக உட்பிரிவு பட்டாவிற்கு விண்ணப்பிப்பது அல்லது உட்பிரிவு பட்டா பெயர் மாற்றம் செய்வது எளிதாகும். அதேநேரம் பட்டா பெயர் மாற்றம் விவகாரத்தில் லஞ்சமே வாங்க முடியாத அளவிற்கு வெளிப்படைத்தன்மையையும், விதிமுறைகளையும் அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்