தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளியே வரவேண்டாம் என சென்னைவாசிகளுக்கு அறிவுறுத்து

1 mins read
8191958b-c8af-410d-a0b3-f0237ac52e52
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

செவ்வாய்க்கிழமை 14 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது என்றும் அம்மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் பதிவாகியுள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சென்னை மக்கள் தகுந்த காரணங்கள் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.

சென்னையில் வெயில் பதிவாகாத போதிலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துளது.

“வீட்டுக்கு வெளியே உள்ள செயல்பாடுகளை குறைக்க, தவிர்க்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். மதுபான வகைகளை முற்றிலுமாக தவிர்ப்பதுடன், எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவது உடல்நலத்தை பேண உதவும் என்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்