தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவுக்கு சங்கரை விசாரிக்க காவல்துறை திட்டம்; யூடியூப் சேனல் மீதும் வழக்கு

1 mins read
76c3e9b2-5b33-4cc0-b4ab-71109913bac7
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். - படம்: இணையம்

கோவை: காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூப் சேனல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யூடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் சங்கர், தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன.

கோவை மாநகர இணையக் குற்ற காவல் துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது கோவை இணையக் குற்ற காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

மே 4ஆம் தேதி தேனியில் இருந்த சவுக்கு சங்கரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் காணொளியை வெளியிட்ட ‘ரெட் பிக்ஸ்’ யூடியூப் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிறையிலுள்ள்ள சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்