தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மௌனம் காக்கும் அதிமுக தொண்டர்களால் சசிகலா கலக்கம்

1 mins read
a0c285b3-62e7-489c-b683-3d830ce3b58b
அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. - படம்: இணையம்

சென்னை: அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று தொடர்ந்து கூறி வரும் சசிகலா, அதிமுக., அமமுக., ஓபிஎஸ். அணிகளுக்குள் தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்துகொள்ள அண்மையில் தொண்டர்களுக்கு ஒரு படிவத்தை அனுப்பியிருந்தார்.

அதில் பெயர், முகவரி, கட்சியில் வகிக்கும் பதவி, 2017ல் வகித்த பதவி உள்ளிட்ட 15 கேள்விகள் இடம்பெற்று இருந்தன.

ஆனால், சசிகலா எதிர்பார்த்த அளவு படிவங்களை பூர்த்தி செய்து யாரும் அனுப்பவில்லை. எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 அணிகளிலுமே சசிகலாவின் வேண்டுகோளுக்கு எவரும் உற்சாகம் காட்டவில்லை.

இதனால் தொண்டர்கள் மனநிலையை புரிந்துகொள்ள முடியாமலும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க தயங்கியபடியும் சசிகலா உள்ளார்.

தேர்தல் முடிவு தெரிந்ததும் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்