தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10ஆம் வகுப்பு தேர்வில் எட்டுப் பேர் மட்டும் தமிழில் 100க்கு 100

1 mins read
deca9e48-03f9-4af0-99e3-049e7a912ff4
10ஆம் வகுப்பு தேர்வில் கணிதப் பாடத்தில் 20,691 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

இதில் தமிழ்ப் பாடத்தில் எட்டுப் பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 500க்கு 499 மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்ப் பாடத்தில் எட்டுப் பேர், ஆங்கிலம் 415 பேர், கணிதம் 20,691 பேர், அறிவியல் 5,104 பேர் சமூக அறிவியல் 4428 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் 87.90 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 91.77 விழுக்காடு, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 97.43 விழுக்காடாகத் தேர்ச்சி விகிதம் உள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் 10ஆம் வகுப்பில் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் 9,14,320 பேர் தேர்வு எழுதியதில் 8,35,614 பேர் (91.39%) தேர்ச்சி பெற்றனர்.

2024ஆம் ஆண்டில் 8,94,264 பேர் தேர்வு எழுதியதில் 8,18,743 பேர் (91.55%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, தேர்வில் சாதித்த மாணவர்களின் எதிர்காலம் சிறக்க, பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்