மதுரை: வைகை அணையில் இருந்து ராமநாதபுர மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீரும் சேர்ந்து கொண்டுள்ளதால் வைகை ஆற்றில் எதிர்பார்த்ததைவிட அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கு காரணமாக இணைப்புச்சாலை ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகனமோட்டிகள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். வைகை அணையில் இருந்து 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.