தமிழக அரசு அமைத்துள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக் கட்டணம் ரத்து

தமிழக அரசு அமைத்துள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக் கட்டணம் ரத்து

1 mins read
31165678-a4c0-4f9f-a374-945df035face
ஆகஸ்ட் 15ஆம் வரை பதிவு செய்வோர்க்கு பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழக அரசு அமைத்துள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

இந்நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பதிவு செய்வோர்க்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், முன்பு பதிவுக் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வசிக்கும் தமிழர்களின் நலன் காக்க, தமிழக அரசு சார்பில், ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

“இந்த வாரியம் மூலம், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. “வாரியத்தில், 18 வயது முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், https://nrtamils.tn.gov.in இணையதளத்தில், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, உறுப்பினராக சேரலாம்.

“உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக, இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஆக்டோபர் 15ஆம் தேதி வரை பதிவு செய்வோருக்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது,” என்று தமிழக அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

வாரிய உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, தீவிர, தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு, கல்வி உதவித்தொகை திட்டம், திருமண உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்