சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, நான்கு மாவட்டங்களில் 10 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, நெல்லை, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
நான்கு மாவட்டங்களிலும் 296 மீட்புக்குழு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்தது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சராசரியாக, 1.77 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 7.12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதில் இருவர் மாண்டுவிட்டனர்.

