கோடை கால மின் தேவையில் தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

1 mins read
1c63d55b-619a-4a27-a84c-74b91a445d7f
தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வரும் நிலையில் கோடைகால மின்தேவை, நுகர்வில் தென் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் மின் தேவை 20,830 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் சராசரி மின் தேவை நாளொன்றுக்கு 15,000 மெகாவாட் ஆகும். கோடை காலத்தில் மின் தேவை அதிகரிப்பது வாடிக்கையாக உள்ளது.

நடப்பு ஆண்டில் கோடை காலத்தில் மாநில மின்தேவை 19,933 மெகாவாட்டாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது.

எனினும், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதையடுத்து மே 2ஆம் தேதி அன்று ஆக அதிகமாக 20,830 மெகா வாட்டாக மின் நுகர்வு அதிகரித்தது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா என பிற தென் மாநிலங்களை விட தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்