முல்லைப் பெரியாறு: தமிழக விவசாயிகள் கண்டனப் பேரணி

முல்லைப் பெரியாறு: தமிழக விவசாயிகள் கண்டனப் பேரணி

2 mins read
aafc1690-8d20-4052-9117-3c8e64dda70a
ஐந்து மாவட்ட விவசாயிகள் வரும் 27ஆம் தேதி குமுளிக்கு பேரணியாகச் செல்கின்றனர். - கோப்புப்படம்: ஊடகம்

தேனி: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரள அரசுக்கு தமிழக விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கேரள அரசுக்கு எதிரான தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், மே 27ஆம் தேதி ஐந்து மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில், ‘முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தற்போதுள்ள அணைக்கு 1,200 அடி கீழே

சர்ச்சைக்கு வித்திடும் புதிய அணையைக் கட்டியபின், பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி வருகிறது. மேலும், புதிய அணை கட்டும் போதும் கட்டி முடிக்கப்பட்ட பின்னும், தமிழகத்துக்கான தண்ணீர் பகிர்வு தற்போதைய ஏற்பாட்டின்படி தடையின்றி தொடரும் என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக கேரள அரசு அளித்த ஆய்வு செய்த மத்திய அரசு, அதை நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு மே 14ஆம் தேதியன்று அனுப்பியது. நிபுணர் மதிப்பீட்டுக் குழு மே 28ஆம் இதுதொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது.

இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவைக் கண்டித்து மே 27ஆம் தேதி நடக்கும் போராட்டத்தில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

“மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சை எப்படியாவது பணிய வைத்து முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது.

“உச்ச நீதிமன்றம் நியமித்த இந்தியாவின் தலைசிறந்த நிபுணர்கள் குழு 13 கட்ட ஆய்வுகள் நடத்தி அணையின் உறுதித் தன்மையை நிரூபித்துள்ளது.

அணையின் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து ஐந்து மாவட்ட விவசாயிகள் குமுளியை நோக்கி பேரணியாகச் செல்கிறோம். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு உணர்வாளர்கள் இதில் திரளாக கலந்து கொள்வாரகள்்,” என்று அன்வர் தெரிவித்துள்ளார்.

கடிதம் எழுதிய தமிழக முதல்வர்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாக நேரிடும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

மேலும், அனைத்துவிதமான, வலுவான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்று உறுதிபடத் தெரிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்