முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு

1 mins read
c73700f2-fefb-40dc-be12-6c0bbc74542b
முல்லைப் பெரியாறு அணை. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மத்திய கண்காணிப்புக் குழு சார்பாக ஜூன் 13, 14ஆம் தேதிகளில் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளரான ராஜேஷ் பொறுப்பில் உள்ளார். தமிழக, கேரள அதிகாரிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி இக்குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. அதையடுத்து கடந்த 18 ஆம் தேதி ஆய்வு நடப்பதாக இருந்தது.

எனினும் ஆய்வுக்கு முன்பே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இதனால் ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 13, 14 ஆம் தேதிகளில் கண்காணிப்புக் குழுவினர் அணையில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்