தகிக்கும் வெயில்: சென்னையில் உச்சம் தொட்ட மின்விசிறி, குளிர் சாதனப் பயன்பாடு

1 mins read
23228915-e81e-4a7e-83b4-7556c74472b0
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது. பத்து ரூபாய்க்கு 3 நுங்குகள் விற்கப்படுகின்றன. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தைத் தாங்கமுடியாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனைச் சமாளிக்க குளிர் சாதனங்கள், மின் விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதுடன், மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் அன்றாட மின் நுகர்வு 40 கோடி யூனிட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது.

தமிழகத்தின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக இருந்துவந்த நிலையில், கோடை வெயிலால் தமிழகத்தின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக சென்னையில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, மே 29ஆம் தேதி சென்னையின் மின் பயன்பாடு 97.53 மில்லியன் யூனிட் என்ற அளவுல் புதிய உச்சத்தை எட்டியிருந்தது.

இதற்கு முன்பு மே 3ஆம் தேதிதான் 97.43 மில்லியன் யூனிட் என்ற அளவு சென்னையின் அதிகபட்ச மின் பயன்பாட்டு அளவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்