சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பது தெரிந்த ஒன்றுதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்பதும் முன்பே தெரிந்த ஒன்று தான் என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
அதிமுக தலைமையில் மாற்றம் ஏற்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இது குறித்து பேசலாம் என்றார்.
“இப்போதே சில கருத்துகளைக் குறிப்பிட இயலாது. காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றார் தினகரன்.
மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் அதிமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.