7 தொகுதிகளில் தேர்தல் வைப்புத்தொகையை இழந்த அதிமுக

7 தொகுதிகளில் தேர்தல் வைப்புத்தொகையை இழந்த அதிமுக

1 mins read
63886790-c54b-4336-b5b6-f8ef6dee3556
அதிமுக 7 தொகுதிகளில் தேர்தல் வைப்புத்தொகையை இழக்கும் அளவுக்கு படுதோல்வி கண்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் தேர்தல் வைப்புத்தொகையை இழக்கும் அளவுக்கு படுதோல்வி கண்டுள்ளது.

சில தொகுதிகளில் குறைவான வாக்குகள் பெற்று நான்காம் இடத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. 35 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு 20.46 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

தென் சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர், புதுவை ஆகிய தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்துள்ளது.

முதன்முறையாக 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களவையில் அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்