கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது அதிமுக: பழனிசாமி

கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது அதிமுக: பழனிசாமி

1 mins read
336d836b-530b-4da4-b379-dc7f05e0a068
எடப்பாடி பழனிசாமி. - படம்: ஊடகம்

சேலம்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் ஒரு கட்சி தோல்வி அடைந்தால், மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை என்று மக்களவைத் தேர்தல் தொடர்பாக குறிப்பிட்டார்.

“கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும்போது, அதிமுக தற்போது ஒரு விழுக்காடு வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

“இதை அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.

குறிப்புச் சொற்கள்