காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரி: திருவண்ணாமலையில் பக்தர்கள் பீதி

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரி: திருவண்ணாமலையில் பக்தர்கள் பீதி

1 mins read
12aa2d6d-fea4-4bc4-9582-eac0302073ca
அகோரி வந்த கார். - படம்: ஊடகம்

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு காரில் மண்டை ஓடுகளுடன் வருகை தந்த அகோரி ஒருவரால் மக்கள் பீதியடைந்தனர்.

வெள்ளிக்கிழமையன்று அந்த அகோரிஇ கோவிலுக்கு வந்தார்.

அங்குள்ள தேரடி வீதியில் தனது காரை நிறுத்திவிட்டு அவர் கோவிலுக்குள் சென்றார். பார்ப்பதற்கு வித்தியாசமாகக் காட்சி அளித்ததால் பொதுமக்கள் பலரும் அதன் அருகே சென்று பார்த்தனர்.

எனினும் காரின் முன்புறத்தில் சில மண்டை ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பலரும் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.

மேலும் காரின் பின்புறத்தில் அகோரி, நாகசாகி என்று எழுதப்பட்டிருந்ததும் மக்களை பயமுறுத்தியது.

இந்நிலையில், காவல்துறையினர் அங்கு வந்து சேர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

அகோரி மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் அவருடைய கார் போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்ததாக கூறி மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்