விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை

1 mins read
e540fac9-a4ef-484e-b4ed-3f04f3ef9fab
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். - படம்: ஊடகம்

சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.

2026 சட்டமன்றத் தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போட்டியிடாது” என அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்