சென்னை: கள்ளச் சாராய விவகாரம் தொடர்பில் கற்பனையாக, பொய்யாக அவதூறு பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகிய இருவரும் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
வழக்கை எதிர்கொண்டுள்ள ராமதாசும் அன்புமணியும் 24 மணி நேரத்திற்குள் முன்னணி ஊடகங்கள் மூலம் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

