முன்னாள் அமைச்சருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து

1 mins read
043e3d45-ada1-4d94-8104-b3904b0507ea
அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி. - படம்: ஊடகம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு, ஓசூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக, அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப் பதிவானது. விசாரணையின் முடிவில், அவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, தனது அமைச்சர் பதவியை இழந்தார் பாலகிருஷ்ண ரெட்டி. தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 16 பேர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தனர்.

குறிப்புச் சொற்கள்