தேர்தல் தோல்வி: 10 நாள்கள் ஆலோசனை நடத்தும் பழனிசாமி

தேர்தல் தோல்வி: 10 நாள்கள் ஆலோசனை நடத்தும் பழனிசாமி

1 mins read
4aaf7e55-1faf-499e-96c5-bf7382e83777
எடப்பாடி பழனிசாமி. - படம்: ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இந்த ஆலோசனை அதிமுக கட்சி அலுவலகத்தில் பத்து நாள்கள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 26 தொகுதிகளுக்கான ஆலோசனை நடக்கும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

வரும் 10ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் பழனிசாமி.

அதன் பின்னர் அடுத்தடுத்த தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நடப்பு எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட மேலும் பலர் பங்கேற்க உள்ளனர்.

அதிமுகவைப் பழைய நிலைக்குக் கொண்டுவரப் போவதாக சசிகலா கூறியுள்ளார். பிளவு ஏற்பட்டுள்ள கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், கட்சி நிர்வாகிகளுடன் பத்து நாள்களுக்கு ஆலோசனை நடத்த உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

குறிப்புச் சொற்கள்