தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

1 mins read
db876b26-9b11-477d-b90c-f671b21e0405
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா. - படங்கள்: ஊடகம்

விக்கிரவாண்டி: மும்முனை போட்டியை சந்தித்துள்ள விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் தலைவர்களின் பேச்சு அனல் பறக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில், தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ளது. நாளை வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த நா. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி காலமானார். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி புதன்கிழமை அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்