கடலூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு

1 mins read
289f1a8d-3aa2-4a8b-9e44-b8463316f47f
பெண்களும் சிறுவர்களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர். - படம்: தமிழக ஊடகம்

கடலூர்: கடலூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாது:

”கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுபோக்கிற்காக உடல் உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம்.

“மருங்கூரில் வாழிடப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தற்போது, பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“பெண்களும் சிறுவர்களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர். இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது. வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாகத் தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழிடப் பகுதிதான் என்பது உறுதியாகின்றது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்