சிவகங்கை: தேவாரம் அருகே உள்ள கோம்பை பகுதியில் 3,000 ஆண்டு பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி (படம்) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தாழிகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் பயன்படுத்தியது என்பதும் அச்சமயம் இறந்தவர்களை அடக்கம் செய்ய இவை பயன்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஈம மண் கலங்களும் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என ஆய்வில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்களும் வரலாற்று ஆசிரியர்களும் கூறியுள்ளனர்.
முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டால் அரிய தொல்பொருள்கள் கிடைக்கும் என்றும் மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.