சென்னை: எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் புதிய அமைச்சரவையில் காங்கிரசும் இடம்பெற வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, புதிய அமைச்சரவையில் காங்கிரசுக்கும் இடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், அமைச்சரவை தொடர்பாக செல்வப் பெருந்தகை பேசியதில் எந்தத்தவறும் இல்லை என்றார்.
“இதற்கு முன்பு திமுக தனிப்பெரும்பான்மையின்றி ஆட்சி அமைத்த போதுகூட காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்.
“திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி சிறப்பாக உள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை,” என்றார் திருநாவுக்கரசர்.

