அரியலூா்: மாமன்னா் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
“மாமன்னா் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் பொருட்டு, ஆகஸ்ட் 17 ஆம் தேதி முழுவேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது,” என்று அவா் மேலும் தெரிவித்தார்.
மேலும், ஆகஸ்ட் 2ஆம் தேதி அனைத்து சாா்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.