தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புவனகிரி அருகே மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை

1 mins read
ac06e2db-5c1c-4f7a-bb50-57dfc16fab8f
நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். - படம்: தமிழக ஊடகம்

புவனகிரி: புவனகிரி அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு. மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டு ரங்கன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பூபதி (70). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். பூபதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

திங்கட்கிழமை இரவு பூபதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கினர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்த பூபதி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே அருகே வசித்து வருபவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் உதவியுடன் பூபதி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் பு.மணவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்