சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாலு உள்ளிட்ட 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவரை செம்பியம் தனிப்படை காவல்துறையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர்.
மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளின் கைப்பேசி அழைப்புகள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.