தமிழக ஆளுநர் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்

1 mins read
2dd756ee-b306-4024-9fa9-f8d4b99be34a
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர். என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருந்தும் புதிய ஆளுநர் யார் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாததால் ஆளுநர் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. - கோப்புப்படம்:

சென்னை: தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆளுநர் ரவி, அண்மையில் டெல்லிக்குச் சென்றிருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் ஆளுநர் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் பதவிக்காலம் முடிவுறும் நிலையிலும் புதிய ஆளுநர் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. அதையடுத்து அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் கேரள மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் அரிஃப் முகம்மது கான் தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக ஆளும் திமுக அரசுக்கும் அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல் திமுகவின் கொள்கைகளையும் விமர்சிக்க தொடங்கினார்.

குறிப்புச் சொற்கள்