சென்னை: இரண்டாவது உலகத் தமிழ்மொழி வளர்ச்சி, ஆய்வு மாநாடு ஆகஸ்ட் 12, 13ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், அறிவியல் தமிழ், சட்டத்தமிழ், மருத்துவத் தமிழ், செயற்கை நுண்ணறிவு துறையில் தமிழ் உள்ளிட்டவை தொடர்பாக கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்கின்றனர்.
சென்னை, அண்ணா பல்கலைக் கழக விவேகானந்தர் அரங்கில் காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் மாநாட்டில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி உட்பட ஆறு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் தமிழறிஞர்களுக்கு வளர்தமிழ் அறிஞர் விருது, வளர்தமிழ் மாமணி விருது வழங்கப்பட உள்ளது.
சென்னை வளர்ச்சிக் கழகத்தின் பன்னாட்டு தமிழ்மொழி மற்றும் பன்னாட்டுக் கழகம், அண்ணா பல்கலைக் கழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மய்யம் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்மொழி வளர்ச்சி, ஆய்வு மாநாடு நடைபெறுகிறது.