வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

1 mins read
bb639e40-3b9d-4172-8925-851ff3a8ede2
தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.   - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,500 உதவித்தொகையும் மருத்துவப் படியாக ரூ.500ம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித் தொகை அடுத்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் 100 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி அவர் பேசியபோது, ‘‘அடுத்த ஆண்டுமுதல் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். அத்துடன், எல்லைக் காவலர்களும் தமிழறிஞர்களும் மரணம் அடையும்போது அவர்களின் ஈமச் செலவுக்கென வழங்கப்படும் தொகையும் உயர்த்தி வழங்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்