தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு அதிபர் விருது, மாநில விருதுகள்

1 mins read
0efa11f1-a20b-4028-b4bd-5877912fcc2c
காவல் ஆணையர் அபின் தினேஷ், டிஜிபி வன்னிய பெருமாள்.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இந்தியாவின் 78வது சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு இரு முறை குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் விருதுகள் வழங்கப்படுகின்றன.

காவல்துறையினரின் செயல்பாடு, சாதனைகள், நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

சுதந்திர தினத்தில், நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, தீயணைப்புத் துறை, மத்திய துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,037 பேர் குடியரசுத் தலைவரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் தமிழகத்தை சேர்ந்த டிஜிபி வன்னிய பெருமாள் மற்றும் ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகிய இரண்டு காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள், தமிழகக் காவல் துறையைச் சோ்ந்த 21 பேருக்கும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 3 வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

மாநில விருதுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் இந்த ஆண்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்