விழிபிதுங்கும் நேப்பாளம்: 10 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா

விழிபிதுங்கும் நேப்பாளம்: 10 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா

2 mins read
19313041-8f35-4c9e-82ad-6c63592d72a6
நேப்பாளத்தைச் சென்றடைந்த நிவாரணப் பொருள்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். - படம்: ஜெய்சங்கர் / எக்ஸ் தளம்
Google News Preferred Icon

புதுடெல்லி: அண்டை நாடான நேப்பாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இந்தியா 137.5 டன் எடையுள்ள அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.

வெள்ளப்பெருக்கினால் திபெத் எல்லைக்கு அருகிலுள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள், வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. பலர் உயிரிழந்துவிட்டனர். இந்திய அரசும் உடனடியாக மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் களமிறங்கி உள்ளது.

இந்திய விமானப்படை தனது ‘சி-130ஜே’ ராணுவ விமானம் மூலம் 137.5 டன் அளவிலான மருந்துகள், அவசர நிவாரணப் பொருள்களை நேப்பாளத்திற்கு அனுப்பியது.

மேலும், நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்ல ‘சி-17’, கூடுதல் ‘சி-130’ விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் மீட்புப் பணிகளுக்கு உதவ சிறப்பு ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் இந்திய விமானப்படை எக்ஸ் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

நேப்பாளத்தைச் சென்றடைந்த நிவாரணப் பொருள்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதிபடுத்தியுள்ளார்.

முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “துயரமான நேரத்தில், நேப்பாளத்தின் சகோதர, சகோதரிகளுடன் இந்திய மக்கள் துணை நிற்பார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேப்பாளப் பிரதமரைத் தாம் தொடர்புகொண்டு பேசியதாகவும் வெள்ளத்தில் இறந்தவர்களுக்காக ஆறுதல் தெரிவித்ததாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக பத்து டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்த நிலையில், வியாழக்கிழமை ராணுவ விமானம் மூலம் 37.5 டன் எடைகொண்ட இரண்டாவது கட்ட நிவாரணப் பொருள்கள் நேப்பாளத்திற்கு அனுப்பப்பட்டன.

இதில் முதலுதவி மருந்துகள், தற்காலிகக் கூடாரங்கள், உலர் உணவுகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் ‘சோலார்’ விளக்குகள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்