சென்னை: முன்னாள் எம்எல்ஏ விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று, கையொப்பமிட்டதே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாலும் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தான் அளித்த ஊடகப் பேட்டியில், பாஜகவினர் தம்மை வற்புறுத்தி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகக் கையெழுத்துப் பெற்றதாக விஜயகுமார் தெரிவித்துள்ளார்.