சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பதைக் கருத்தில் கொண்டு உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் தொகை வழங்கப்படும். ஆனால், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


