சென்னை: லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ள இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜா தம்மை நேரில் சந்தித்ததாகவும் அப்போது லண்டன் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்த தமக்கு நன்றி கூறியதாகவும் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு ஏன் பாராட்டு விழா நடத்தவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.