தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
e96259d9-b43c-4f5d-8a3e-17f331364d89
மா.சுப்பிரமணியத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. - கோப்புப் படம்: மாலை மலர்

சென்னை: தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு நாள்களாக அவர், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

அவருக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வருவதால் அவர் உடனடியாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் தேறியவுடன் ஓரிரு நாள்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்