தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளுநரைச் சாடிய தமிழக அமைச்சர்

1 mins read
485710eb-ccce-4b72-8a9b-1eaa569a7ffe
தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன். - கோப்புப் படம்: தி இந்து / இணையம்

சென்னை: தலித் மக்களுக்கு எதிராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதாக அம்மாநிலத்தின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற திரு அம்பேத்கரின் 69வது நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்றாண்டுகளில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளன,” என்றார். அவர் கூறியது ஆதாரமற்றது என்று அமைச்சர் மதிவேந்தன் சாடினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகக் (திமுக) கட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி, தொழில், பொருளியல் நிலைகளில் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலே அதற்கான சான்று என்றும் அவர் எடுத்துரைத்தார்.

திமுக ஆட்சியில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 1,303 தொழில் முனைவர்களுக்கு 159 கோடி ரூபாய் மானியமும், தொழில் முனைவுத் திட்டத்தின்கீழ் மூவாண்டுகளில் 52,255 பயனாளர்களுக்கு 409.68 கோடி ரூபாய் மானியத்துடன் கடனுதவியும் வழங்கப்பட்டது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சமத்துவ மயானங்களைக் கொண்டுள்ள 199 கிராமங்களுக்கு 30 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்