சென்னை: நூறு நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், அதை தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருவதாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், “இந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ரூ.1,056 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்தத் தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது,” என்று முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.