கோவையில் இந்தியாவின் ஆகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கத் திட்டம்

1 mins read
a2cd4c05-d21a-4f9e-8082-c58e4291ba46
ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் சாத்தியக்கூறு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாண்டு ஜூன் 14ஆம் தேதி நேரில் ஆய்வு செய்திருந்தார். - படம்: தி இந்து

சென்னை: கோவையில் அனைத்துலக கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. கோவையில் அனைத்துலக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ஒண்டிப்புதூர், எல்&டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள இடம், சிறை மைதானம் ஆகிய நான்கு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் சாத்தியக்கூறு பற்றி அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்திருந்தார்.

அந்த இடம் சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் இருப்பதால், அப்பகுதியில் மைதானம் அமைப்பது சரியாக இருக்கும் எனவும் அது இந்தியாவின் ஆகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்