ஏற்றுமதியில் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் தமிழகம்: தமிழகத்தில் கோவை முதலிடம்

1 mins read
7f63e48a-7661-4fd6-b20c-a5f81745e4c2
கோவை மாவட்டம் ரூ.23,932 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

கோவை: ஏற்றுமதித் துறையில் இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும், கோவை மாவட்டம் ரூ.23,932 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய தொழில் வர்த்தக அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு, 3.8% வளர்ச்சியுடன், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு கூடுதலாக ஏற்றுமதி நடந்துள்ளதாகவும் அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024-25ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த, புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது மத்திய தொழில் வர்த்தக அமைச்சு.

அதில், ரூ.8.08 கோடி மதிப்பில், ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது குஜராத் மாநிலம். அதேசமயம், முந்திய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், 11.66% வீழ்ச்சி அடைந்துள்ளது.

“மகாராஷ்டிர மாநிலம் ரூ.4.52 லட்சம் கோடியுடன் இரண்டாம் இடத்திலும் தமிழகம், 21.32% பெரும் வளர்ச்சி கண்டு ரூ.3.52 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

“இதில் கோவை மாவட்டம், ரூ.23,932 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

“கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் மட்டும் கோவை மாவட்டம் ரூ.27,686 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்திருந்தது. நடப்பாண்டில் மேலும் இது, 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது,” என தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்