சென்னை: மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய ரூ.2,152 கோடி நிதியை ஒதுக்காமல் உள்ளது.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
அவரது அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் அறிவிப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதற்கிடையே மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஒரு வாரம் கறுப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.