தமிழகத்​தின் கடன் $176.5பி.: வெள்ளை அறிக்கை குறித்து திமுக விமர்சனம்

தமிழகத்​தின் கடன் $176.5பி.: வெள்ளை அறிக்கை குறித்து திமுக விமர்சனம்

2 mins read
50f4c9f0-db3a-4da7-9ae0-3423df3fc6b6
வெள்ளை அறிக்​கை​யை, நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் (இடது) செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வெளி​யிட்​டார். - படம்: தமிழகத் தலை​மைச் செயல​கம்

சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வெளியிட்டது. இந்நிலையில், அதை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

“தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது. ஆனால், தனது நிர்வாகத் திறமையின்மையாலும்  வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் தவெக தடுமாறுவதை இது காட்டுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

அதிகரித்த கடன்

வெள்ளை அறிக்​கை​யில், அரசின் கடன் ரூ.13 லட்​சம் கோடி​யாக (176.5 பில்லியன் வெள்ளி) உள்​ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்​வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்​சம் (1,735 வெள்ளி) கடன் சுமை உள்​ளது என்று கூறப்​பட்​டுள்​ளது.

“கொரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிந்​தைய 2021-22 முதல் 2025-26 வரையி​லான ஐந்​தாண்டுக் காலக் கட்​டமே இந்த வெள்ளை அறிக்​கை​யின் மையப் பகுப்​பாய்​வுக் கால​மாகும். பெருந்​தொற்​றுக்​குப் பிந்​தைய மீட்​சிக் காலத்​தில் கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா போன்ற மாநிலங்​கள் தங்​களின் நிதி நிலை​யைச் சீரமைத்​துள்ள நிலை​யில், தமிழகத்​தின் வளர்ச்சிக் குறி​யீடு​கள் எதிர்த் திசை​யிலேயே நகர்ந்​துள்​ளன.

“தமிழகத்தில் ரூ.46,538 கோடி​யாக இருந்த வரு​வாய்ப் பற்​றாக்​குறை கடந்த ஐந்​தாண்​டு​களில் ரூ.78,324 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. மாநிலச் சொத்து வரி வரு​வாய் கடும் வீழ்ச்​சி​யைச் சந்​தித்​துள்​ளது. தற்போதைய நுகர்​வுச் செல​வு​களை ஈடு​கட்டவே மாநிலம் கடன் பெற்​றுள்​ளது.

“தமிழகத்​தின் நிலு​வை​யில் உள்ள கடன் பொறுப்​பு​கள், கடந்த ஐந்​தாண்​டு​களில் ரூ.5.13 லட்​சம் கோடி​யில் இருந்து ரூ.10 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. ஆண்டு வட்​டிச் சுமையும்​ ரூ.67,050 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

“மின்துறை நிறு​வனங்​களின் கடன் மட்​டும் ரூ.2.47 லட்​சம் கோடி​யாக உள்​ளது. போக்​கு​வரத்​துத் துறை​யில் ஒரு கிலோமீட்டருக்கான செலவு ரூ.78.81 ஆகவும் வரு​வாய் ரூ.25.97 ஆகவும் உள்​ளது. அதன்​படி, போக்​கு​வரத்துத் துறை​யில் ரூ.72,667 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

“கடந்த 2021-2026ஆம் ஆண்டு காலக் கட்​டத்​தில் ரூ.4.87 லட்​சம் கோடி கடன் பெறப்​பட்​டிருந்​தது. இந்த ஐந்​தாண்டு கால கடன், மாநிலம் தனது முதல் 60 ஆண்டுக் காலத்​தில் பெற்ற கடனை விட அதி​க​மாகும்.

“இந்த இக்​கட்​டான சூழலிலிருந்து மீள, வரு​வாய் திரட்​டு​வதை அதி​கரித்​தல், செல​வினங்​களை முறைப்​படுத்​துதல், பொதுத்​துறை நிறு​வனங்​களில் சீர்​திருத்​தம், ஊழலற்ற நிர்​வாகம்​ அவசி​யம்,”​ என்​று வெள்​ளை அறிக்​கை பரிந்​துரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தவெகநிதிநிலைதமிழகம்