சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் ஆணைக்கிணங்க தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் புதியதாக தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் எனவும், ஏற்கெனவே இயங்கி வரும் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அதன் தலைவராக முதல்வரே செயல்படுவார் என்றும் தமிழ் வளர்ச்சி, பள்ளிக்கல்வி, செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
மேலும், உலகத் தமிழ் மாநாடு மீண்டும் உலகெங்கிலும் சிறப்பாக நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்களையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்று உரையாற்றினார்.
இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வன்னி அரசு உள்ளிட்ட பல முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,
தமிழ் கலாசாரத்தையும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில், அரசு அலுவலர்கள் வாரம் ஒரு நாள் கட்டாயம் வேட்டி, சட்டை அணிந்து வரும் வகையில் ‘மரபாடை தினம்’ அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
“தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஆம் தேதியை தமிழக மக்கள் வழக்கமாகக் கொண்டாடி வந்தாலும், மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பின்படி சென்னை மாகாணத்திலிருந்து தமிழ் பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நவம்பர் 1ஆம் தேதியையும் தமிழ்நாடு நாளாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் என்றார் திரு ராஜ்மோகன்.
