டாஸ்மாக் மூடல்: கடைகளில் அலைமோதிய கூட்டம்

டாஸ்மாக் மூடல்: கடைகளில் அலைமோதிய கூட்டம்

1 mins read
01c8ac08-9b2a-433d-b4a6-0c077101c08a
வாக்கு எண்ணும் நாளான திங்கட்கிழமை ‘டாஸ்மாக்’ என்னும் தமிழக அரசின் மதுக்கடைகள் மூடப்படும் என்பதால் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளில் ஏராளமானோர் குவிந்து முந்தியடித்துக்கொண்டு மது வாங்கிச் சென்றனர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத்​தில் சட்​டமன்றத் தேர்​தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி நடை​பெற்ற நிலை​யில், வாக்கு எண்​ணிக்கை இன்று நடை​பெறுகிறது.

தேர்​தலை முன்​னிட்டு மாநிலம் முழு​வதும் ‘டாஸ்​மாக்’ என்னும் தமிழக அரசின் மது​பானக் கடைகள் வாக்​குப்​ப​திவு நடை​பெறும் ஏப்ரல் 23ஆம் தேதி​யும் அதற்கு முன்​பாக இரண்டு நாள்​கள் ஏப்​ரல் 21, 22ஆம் தேதி எனத் தொடர்ந்து மூன்று நாள்​களும், வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் மே 4ஆம் தேதி​யும் மூடப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி வாக்​குப்​ப​திவுக்கு முன் மூன்று நாள்கள் கடைகள் மூடப்​பட்​டன. அதையடுத்து ஏப்ரல் 20ஆம் தேதி மட்​டுமே ரூ.400 கோடிக்கு மது விற்​பனை நடை​பெற்​றது.

தமிழகம் முழு​வதும் நாளொன்​றுக்குச் சராசரி​யாக ரூ.150 கோடிக்கு மது விற்​பனை நடை​பெறும் நிலை​யில், ஞாயிற்​றுக்​கிழமை​களில் கூடு​தலாக விற்​பனை நடை​பெறும்.

கடைகள் மூடப்​படு​வது தெரிந்​தால் அன்​றைய நாளுக்​கும் சேர்த்து முந்​தைய நாளே மதுப்​பிரியர்​கள் வாங்கி வைத்​துக்​கொள்​வார்​கள். அதன்​படி, வாக்கு எண்ணுவதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராள​மானோர் மதுக்​கடைகளில் குவிந்து மதுப் புட்டிகளை வாங்​கிச் சென்​றனர்.

ஒரு சிலர் இதைப் பயன்​படுத்தி கள்​ளத்​தன​மாக மது விற்​பனை செய்​ய​லாம் என்​ப​தால் அதைத் தடுக்க கண்​காணிப்​புப் பணி​களை மேற்​கொள்​ள​வும் அறி​வுறுத்​தப்​பட்​ட​தாக அதி​காரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்