திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கடந்த ஆண்டு 300 கிலோ தங்கத்தை காணிக்கையாக அளித்துள்ளனர்.
அந்த தங்கத்தை தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் இந்தப் பணி நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
தமிழக கோவில்களில் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள நகைகளைத் தவிர, காணிக்கையாக கிடைத்துள்ள தங்க நகைகளை உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, வங்கியில் முதலீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்.


