45 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

1 mins read
bc1e2688-7576-4f4f-8b96-13eb299c1ab7
ஏற்கெனவே, 28 இந்திய மொழிகள், 35 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: 45 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இத்தகவலை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்து பேசும்போது குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, 28 இந்திய மொழிகள், 35 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசியா, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேசப்படும் 28 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க பல்வேறு நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

இதையடுத்து, மேலும் 45 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும் என்றும் அதன் பின்னர் ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193 உலக நாடுகளின் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நுால் என்ற பெருமை திருக்குறளுக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

“அடுத்த மூன்றாண்டுகளில் இந்தப் பணியை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு பாடநுால், கல்வியியல் பணிகள் கழகம், பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும். இத்திட்டத்துக்காக ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார் தங்கம் தென்னரசு.

குறிப்புச் சொற்கள்