தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று நாள் வெள்ளி விழாக் கொண்டாட்டம்

1 mins read
6f04b05d-1a95-48ab-9c61-7e6328c6c7b5
ரூ.37 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியிழைப் பாலம். - படம்: தமிழக ஊடகம்

கன்னியாகுமரி: புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வள்ளுவா் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, வெள்ளி விழாக் கொண்டாட்டம் வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 30) தொடங்கவுள்ளது.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ள விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உட்பட பலரும் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல் நாள் நிகழ்ச்சியின்போது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியிழைப் பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் திங்கட்கிழமை திறந்து வைக்கிறாா்.

அத்துடன், திருக்குறள் நெறியைப் பரப்பும் 25 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, குறளை மையப்படுத்தும் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் நிகழ்ச்சியின்போது, முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் தோரண வாயிலுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றவுள்ளாா். நிறைவு நாள் நிகழ்ச்சி ஜனவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்