மதுரை: திருப்பரங்குன்றம் மலை குறித்த சர்ச்சை தொடர்பில் தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், “திருப்பரங்குன்றத்தில் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டைபோட வைத்துவிடுவீர்கள்,” என்றும் கூறினர்.
திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல்துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் அம்மலைக்கு மத்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, “ஏன் இதுபோன்ற வழக்குகளைத் தாக்கல் செய்கிறீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், வழிபாட்டுத் தலங்கள் குறித்த வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரிய மனுதாரர் கோரிக்கையை அவர்கள் நிராகரித்தனர்.